திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 29ம் நாள் அதாவது திங்கட்கிழமை (02) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் 14 பேருக்கு கொரோனா உறுதி.
- மேல் மாகாணத்தில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை அமுலாக்கும் அனுமதி வழங்கப்பட்டது. நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்களை விநியோகிக்கலாம். அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.
- மொத்தமாக 89 அரச நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
- திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவிப்பு.
- பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி (Online) மூலம் இன்று (2) நடைபெற்றது. இதில் தற்போதைய கொரோனா நிலையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பித்தலை 2 வாரங்களால் அதாவது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிற்போட தீர்மானிக்கப்பட்டது.
- வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பு.
- நாடளாவிய ரீதியில் சதொச நிறுவனத்தின் இணையத்தளத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பொருட்களை சலுகை விலையில் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவின் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
- மேல்மாகாணத்தில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் (மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம்) நாளை மறுதினம் (04) திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, இரத்மலானை, நாராஹென்பிட, போகுந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலைய ஊழியர்களுக்கு நாளை பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைக் கண்காணிக்க சிவில் உடையில் உளவுச் பிரிவு உத்தியோகத்தர்களையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (02) இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
- கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தற்கொலை செய்த நிலையில் பானந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட 27 வயதுடைய நபரின் பிரேத பரிசோதனையின் போது செய்யப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இன்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே இது 22 ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர் தற்கொலை செய்தவர் என்பதனால் அந்த அறிவிப்பு பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது.
- ஊரடங்கு அனுமதிப்பத்திரம் அவசியமானவர்கள் secretary@mws.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிப்பு.
- கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாதகம, மாவனல்லை, புளத்கொஹூபிடிய காவற்துறை அதிகாரப் பிரிவுகள் கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் கிரிஉல்ல காவற்துறை அதிகாரப் பகுதிகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு.
- இன்றைய தினம் 275 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 04, 2020
Rating:
No comments: