திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 30ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு வயது இடைவெளியானது பாரிய தாக்கத்தை செலுத்தாது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாப்பிரேம தெரிவிப்பு.
- நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்தது.
- கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறைபடுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழிகாட்டல் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டு, அது சுகாதார அமைச்சருக்கும் கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டுமையத்தின் பிரதானிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (09) மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவிப்பு.
- மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
- கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த அவசியமாயின், அது குறித்து தாங்கள் தொழில்நுட்ப பரிந்துரைகளை அவதானித்து செயற்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
- பேருவளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இலங்கையில் மேலும் இருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த 68 மற்றும் 61 வயது பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதைதொடர்ந்து இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.
- 3 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை ஒலி/ ஔிபரப்பு செய்யும் கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு.
- யட்டியாந்தோட்ட, இங்கிரியாவத்த பகுதியை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் தந்தை இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
- ஹட்டன் நகரில் தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
- நான் கடலுக்கு பலியானால் கொரோனா தொற்றை நாட்டிலிருந்து ஒழிக்க முடியுமாயின், அதற்கும் நான் தயார் என இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
- கொவிட்-19 பரவல் காரணமாக தொழிற்துறையினருக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக 0713 976 406, 0113 158 117, 0770 820 775 ஆகிய இலக்கங்களை கைத்தொழில் அமைச்சு வெளியிட்டது.
- வைத்திய கட்டளைச் சட்டத்திற்கு அமைவான இரண்டு கட்டளைச் சட்டங்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- கிளிநொச்சியில் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் 25 மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரை 24 மாவட்டங்களிலேயே கொரோனா பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
- இன்றைய (3) தினத்தில் 409 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 04, 2020
Rating:
No comments: