திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 32ம் நாள் அதாவது வியாழக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வெலிக்கடை சிறையில் 4 பெண் கைதிகள், 2 ஆண்கைதிகள், ஒரு சிறை அதிகாரி ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று. 
  • தனிமைப்படுத்தப்பட்டிருந்த புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை 297 ஆக உயர்வு. 
  • கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
  • மேலும் 11 துறைமுக ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  • கல்பிட்டி ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீட்டுக்கு வரும்பொழுது திடீரென விழுந்து உயிரிழப்பு. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கடுமையான முறையில் கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறுவுறுத்தியுள்ளார். 
  • நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் உயிரிழந்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாகவும் வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
  • மாவனல்லையில் மேலும் 9 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கடந்த தினம் மாவனல்லையில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றின் மணமக்களும் அடங்குவதாகவும் தெரிவிப்பு. 
  • தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR செய்தவருக்கு POSITIVE. ஆனால் அவர் பிழையான தகவல்களை வழங்கியமையால் அவரைத் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளதாக ராணுவ தளபதி தெரிவிப்பு. 
  • பெரண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாததால் அது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு தொடர்வில் உடன் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதால் அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • 25 நபர்களுக்கு மேல் மஸ்ஜித்களில் ஒன்றுசேரக் கூடாது என்று முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அறிவிப்பு. இதன் காரணமாக ஜும்ஆவுக்கு பதிலாக லுஹர் தொழுகையை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டது. 
  • கொரோனாவினால் இன்றைய தினம் மாத்திரம் 05 பேர் மரணம். அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உயிரிழப்பு. விபரம் இதோ: (1) கொழும்பு-2. 46 வயது ஆண். (திபுரு ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-12. 58 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (3) கொழும்பு-14 73 வயதுடைய பெண். (வீட்டில் உயிரிழப்பு) (4) கொழும்பு-15. 74 வயதுடைய ஆண். (வீட்டில் உயிரிழப்பு) (5) வெல்லம்பிட்டிய. 68 வயதுடைய பெண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
i
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.