திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 33ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வெலிகட சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இதில் 22 பெண் கைதிகள் மற்றும் 1ஆண் கைதியாகும். 
  • தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • வார இறுதியில் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
  • ராகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
  • வத்தளையில் இயங்கி வந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இதுவரை 119 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 
  • கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 20 சிறுவர்கள், 12 கர்ப்பிணிகள் மற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார். 
  • கொழும்பு குற்றவியல் பிரிவின் சுமார் 40 அதிகாரிகளுக்கு தற்போதைய நிலையில் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் பெரண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வது குறித்து தற்போது சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் PCR பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். இதன்படி, உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் வைரஸ் பரிசோதனைக் கட்டமைப்புக்களை கொரியாவில் இருந்து தருவித்திருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். 
  • இம்முறை கொரோனாவிற்கு மத்தியிலும் சிறப்பாக இன்றுடன் நிறைவடைந்தது உயர்தர பரீட்சை. இம்முறை IDH வைத்தியசாலையில் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
  • 07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலாத்துஓயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு திறக்கப்படக்கூடும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • LPL 20க்கு20 கிரிக்கட் தொடரை, எதிர்வரும் 27ஆம் அல்லது 28ஆம் திகதிகளில் சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் ஆர்ம்பிக்கக்கூடியதாக இருக்கும் என லங்கா பிறீமியர் லீக்தொடரின் பணிப்பாளர், ஸ்ரீலங்கா கிரிக்கட உப தலைவர் ரவின் விக்கிரமரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். 
  • சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தபடுமாயின், அவர்களுக்கும் தனித்தனியாக ரூபா 10,000/= பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப்பொதி வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இதனை தெரிவித்தார். இதுவரை கிடைக்காதவர்கள் 011 236 9139 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உலர் உணவுப்பொதியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிப்பு. 
  • 2020 ற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரி 18 - 28 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் இன்று தெரிவித்தார். 
  • 30ஆவது கொரோணா மரணம் மோதர, கொழும்பு-15 ஐச் சேர்ந்த 23 வயதுடைய ஆண். IDH வைத்தியசாலையில் நேற்று(5) உயிரிழந்துள்ளார். ஆனால் அரச தகவல் திணைக்களம் இதை இன்று இரவு 11.10 ற்குதான் அறிவித்தது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.