திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 36ம் நாள் அதாவது திங்கட்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகின. அதாவது நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்ததாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன. 
  • குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருணாகலை மாநகர எல்லை பிரதேசத்திற்குள் ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மூன்றைத் தவிர குளியாப்பிட்டி பொலிஸ் வலயத்தில் ஏனைய பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • கம்பஹா மாவட்டத்தின் கந்தானை மற்றும் மஹாபாகே பொலிஸ் பிரிவுகள் மற்றும் அங்குலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார். 
  • கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக பகல் வேளையில் ஆரம்ப பிரிவில் தரம் 3, 4 மற்றும் 5 தரத்துக்கான முக்கிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 11 வரையிலுமான முக்கிய பாடங்களும், உயர்தர வகுப்புக்களில் அனைத்து பாடங்களுக்குமான முக்கிய பாடங்களுக்காகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்புக்களை 2020.11.15 திகதி தொடக்கம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வெலிகட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 
  • பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் எடுத்துச் சென்று அம்பலாங்கொட பகுதியில் விற்பனை செய்த மீன் வியாபாரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொற்றாளர்கள் கடந்த போயா தினம் திலகபுர உதயகிரி விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து விகாராதிபதி விகாரையினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இன்று (09) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர். 
  • நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 
  • கொவிட் தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ´உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள்´ ஒரு இலட்சம் உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
  • மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 
  • கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில இன்று மீண்டும் ஆரம்பம். 
  • கடுவெலை மாநகர சபையின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 
  • நீர் கட்டணத்தை வழங்க வருபரை சந்திப்பது அல்லது உரையாடுவதை குறைத்துக்கொள்ளுமாறும், நீர் கட்டணம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டால் நீர் கட்டணத்தில் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 
  • குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மாத்திரமே பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்த போதிலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். 
  • 36வது கொரோனா மரணம் பதிவு. கந்தானை பிரதேசம். 84 வயது பெண். (தனியார் வைத்தியசாலையிலிருந்து IDHக்கு மாற்றும் பொழுது உயிரிழப்பு) 
  • இன்றைய தினம் 356 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.