திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 37ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- சீனிக்கான மொத்த விற்பனை விலை அடங்கிய வர்த்தமானி வெளியானது. பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ரூ. 90, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ 85 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயித்து அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதால் இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு. குறைந்த கட்டணம் 12 ரூபாவில் இருந்து 14 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனையவை 20% அதிகரிப்பு.
- 4 % வட்டி கடன் திட்டத்தில் கடன் பெற்றோர் அதனை திருப்பி செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைக்காலமானது 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
- திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. ஏற்கனவே திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியிருந்தது.
- தனிமைபடுத்தபட்ட காரணத்தால் மாவனெல்லை பிரதேச சபையின் அமர்வுகளை இன்று முதல் 7 நாட்களுக்கு நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கொவிட் 19 பரவல் ஆரம்பத்தின் போது, பயணிகள் பேருந்து இயக்குனர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை விடுவிக்க எடுத்த தீர்மானத்தை இந்த வருடம் இறுதி வரையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு.
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் நாளை முதல் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களின் காரியாலயங்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- மேல் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
- மதுகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.
- மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் 12 வயதுடைய மாணவியொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
- இதுவரையில் 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
- Covid-19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இலங்கையில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
- இன்று 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) ராஜகிரிய முதியோர் இல்லத்தில் வசித்தவர். 51 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 2) கொழும்பு-10, 45 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) 3) கம்பஹா, உடுகம்பல பிரதேசம். 63 வயது பெண். (கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) 4) 55-60 வயது மதிக்கத்தக்க ஆண். பிரேத பரிசோதனையில் தொற்று உறுதியானது. (இவர் தொடர்பான வேறு எந்த தகவலையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிடவில்லை) 5) ராகம பிரதேசம். 48 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த கொரோனா மரணங்கள் 41 ஆக அதிகரிப்பு.
- இன்றைய தினத்தில் மாத்திரம் 430 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 11, 2020
Rating:
No comments: