திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 38ம் நாள் அதாவது புதன்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 63 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவிப்பு. 
  • பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்? என்ற வழிகாட்டல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்தது. 
  • ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதன் காரணமாக, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
  • கம்பஹா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. இவர் கடந்த சில தினங்களாக பிரதேசங்களில் சிலவற்றில் அமைந்துள்ள விகாரைகளில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு. 
  • இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படது. 
  • அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இ.போ.ச. தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு. ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு தொடருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் தொடருந்து சேவைகள் அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை. 
  • சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பு துறைமுக நகர் (Port city) கட்டுமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
  • இன்று 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) பாணந்துரை பிரதேசம். 80 வயது ஆண். (பொலிஸ் வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) கொழும்பு-11. 40 வயது ஆண். (கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) களனி பிரதேசம். 45 வயது ஆண் (அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழப்பு) (4) மாளிகாவத்தை பகுதி. 68 வயது பெண். (வீட்டில் உயிரிழப்பு) (5) இம்புல்கொட பகுதி. 63 வயது ஆண். (அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் உயிரிழப்பு) 
  • இன்றைய தினத்தில் மாத்திரம் 635 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.