திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 41ம் நாள் அதாவது சனிக்கிழமை (14) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- முன்னர் கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் மிகுந்த அவதான நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1083 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் கொவிட் 19 பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
- கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு.
- கொரோனா மரணம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பிய 35 வயதுடைய கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கொழும்பு கோட்டை, புறக் கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) காலை 05 மணி முதல் களனி பொலிஸ் பிரிவுதனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு. தற்போதைய நிலையில், கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும். இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து நாளை (15) காலை 05 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குருநாகல் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வடமேல் மாகாண தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
- சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பு.
- கொழும்பு துறைமுகத்தில் இதுவரை 61 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுமார் 200 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரால் தயா ரத்னாயக்க தெரிவிப்பு.
- கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலை நீங்கும் வரையில், வீடுகளில் நிகழும் மரணம் தொடர்பில், கிராம சேவகரினால் அறிக்கை வழங்கப்படும்போது, குறித்த மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிப்பு.
- யாசகர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கொழும்பு நகரில் உள்ள மின் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலுள்ள யாசகர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுப்பு.
- ஊரகஸ்மங்சந்திய வடக்கு, ஊரகஸ்மங்சந்திய தெற்கு, யட்டகல மற்றும் வல்இங்குருகொடிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 392 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 14-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 15, 2020
Rating:
No comments: