திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 45ம் நாள் அதாவது புதன்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பழைய
- போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைது, ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு.
- கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பிராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
- குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
- கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
- 30 வருடகால யுத்தத்தை விடவும் கொரோனா வைரஸ் பரவலானது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர், களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
- கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. என்று தான் பதவியேற்று ஓராண்டு நிறைவுக்காக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.
- மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். 2) கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண். 3) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 327 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 19, 2020
Rating:
No comments: