திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.