திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 47ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கொவிட்19 தொற்றுகாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 02 பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார். தாய் தொடர்ந்தும் தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
  • இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வடமேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படமாட்டாது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்த இடங்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
  • மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது. 
  • நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. 
  • சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானித்ததாக தெரிவித்தார். 
  • பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன. 
  • கொரோனா 2வது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள E-Channel இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,280 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.