திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 48ம் நாள் அதாவது சனிக்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (20) முதல் 14 நாட்கள் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இதுவரையில் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநயக்க தெரிவித்துள்ளார்.
- சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- முறையான திட்டம் ஒன்றை தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளன.
- நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.
- கொரோனாவினால் மேலும் 9 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இத்துடன் மொத்த மரணம் 83 ஆக உயர்வு.
- இன்றைய தினம் மாத்திரம் 491 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 23, 2020
Rating:
No comments: