திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 49ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பொரல்ல, கோட்டை, கொம்பனி வீதி மற்றும் வெல்லம்பிடிய பொலிஸ் பிரிவுளும் கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஜா-எல மற்றும் கடவத்தை பொலிஸ் பிரிவுகளும் நாளை (23) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படுவதாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • குருணாகலை பிரதேச தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் குருணாகலை பிரதான தபால் அலுவலகத்தின் அலுவலக ஊழியர்கள் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குருணாகலை மாவட்டத்தின் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 
  • பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 
  • பச்சையாக மீனை உண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சியை வரவேற்கும் நிகழ்வொன்று தங்காலை மீன்பிடி துறைமுக மீனவர்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதாரச்சி பச்சையாக மீனை உண்ட சம்பவத்தை தொடர்ந்து மீன் வியாபாரம் இத்தினங்களில் வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெரிவித்தே அவருக்கு இந்த வரவேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  • நாளை முதல் ஒரு வாரக்காலத்திற்கு பாடசாலைகளை திறந்து குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு வகையில் பாடசாலை கொவிட் கொத்தணி ஒன்று உருவானால் அரசாங்கத்தின் சார்பாக தான் அந்த பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடித்து நாளை தொடக்கம் அலுவலக ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த ரயில்கள் நிறுத்தப்படாது எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
  • நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
  • நாளை முதல் ஆரம்பமாவுள்ள மூன்றாம் தவணைக்கு பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து முறைகளை பொலிஸ் ஒழுங்குபடுத்த உள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
  • பாடசாலைகளில் கொரோனா அச்சம் அதிகரிக்காமல் இருக்க சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு. 
  • கொட்டகலை பகுதியில் இரண்டு வயதுடைய குழந்தைக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 4 கொரோனா மரணம் அறிவிப்பு. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 400 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.