தரம் 6 - 13 ஆம் தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் சில பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. அந்தந்த பகுதிகளில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரி மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய வடமேல் மாகாணத்தில் 48 பாடசாலைகளும், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் 14 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 12 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 6 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் ஒரு பாடசாலையும் திறக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் எந்த பாடசாலைகளும் மூடப்படவில்லை.
இதேவேளை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு.கமகே தெரிவிக்கையில்,
ஹட்டன் வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளும் கண்டி–அக்குறனை மற்றும் மஹிய்யாவ பகுதிகளை சேர்ந்த பாடசாலைகள் சிலவற்றின் கற்றல் செயற்பாடுகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொள்வார்கள் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (23) திறக்கப்படாத பாடசாலைகள்...
Reviewed by irumbuthirai
on
November 23, 2020
Rating:
No comments: