திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 27ம் நாள் அதாவது சனிக்கிழமை (31) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹட்டன் நகரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் இன்று (31) தொடக்கம் மீண்டும் திறப்பு. 
  • தற்போது இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. 
  • மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 
  • கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு. 
  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுப்பு. 
  • பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட இதுவரை தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 78 ஆக உயர்வு. 

  • இலங்கையில் 20ஆவது கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 12 ஐச் சேர்ந்த இந்தப் பெண்மணி ஒரு நீரிழிவு நோயாளி என தெரிவிக்கப்பட்டது. 
  • மேல் மாகாணத்திற்கு உள்வரவோ அல்லது வௌியேறவோ விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மட்டுப்பாடு பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை அதிகரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான விஷேட புகையிரதம் மற்றும் பஸ் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிப்பு. 
  • வத்தள பகுதியில் உள்ள கைத்தொழிற்சாலை ஒன்றில் 49 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாரணப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம். ஒவ்வொரு பொதியும் பத்தாயிரம் ரூபா பெறுமதியானவை. இவற்றில் 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவும், பழ வகைகளும் உள்ளடங்கி இருக்கின்றன. அதேவேளை, முடக்க நிலை காரணமாக ஒரு மாத காலத்திற்கு மேலாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என அறிவிப்பு. 
  • பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொவிட்-19 வைரசு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுமானால் 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவிப்பு. 
  • கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் பல்வேறு இடங்களிலிருந்தும் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • பேருவளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உயர்தர மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதற்காக ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • இன்றைய தினம் 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 31-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.