33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்:


நேற்று (15) வெளியான 2020 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், இந்த பெறுபேறுகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களத்தின் இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டன. 
பரீட்சைக்கு சுமார் 336,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த வருடத்தில் இந்த பரீட்சை பெறுபேறுகளை 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. 
ஆனால் முன்னர் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பல மாதங்கள் செல்லும். இந்த துறைச்சார்ந்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட க்கூடியதாக இருந்தது. 
இதுமாத்திரமன்றி மற்றுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால், இம்முறை இந்த பரீட்சையில் 10 பேர் 200 புள்ளிகளை பெற்று சித்திப்பெற்றமை பாராட்டத்தக்கதாகும் என்று தெரிவித்தார். 
எமது நாட்டின் பெறுமதி மிக்க சொத்து மாணவர் சமூகமாகும். அவர்களின் முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்வதே நோக்கமாகும் என்றும்; கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார். 
மேற்படி விடயங்களை இன்று (16) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் தெரிவித்தார்.
33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: 33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.