நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் 15 ஆம் திகதி மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மாத்தளை மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பின்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன...
- முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
- மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.
6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு...
Reviewed by irumbuthirai
on
November 17, 2020
Rating:
No comments: