பயன்படுத்தப்படும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பின்வரும் வழிகாட்டல்களை வெளியிடப்பட்டுள்ளன.
- தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பிரதேசங்களில் சிகிச்சை கழிவு பொருட்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள், ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.
- Covid-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவதற்கு மஞ்சள் நிற பைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த பொதிகளில் போடப்படும் கழிவு பொருட்கள் எவ்வகையிலும் மீள்சுழற்சி செய்யப்படாமல் முறையாக அழிக்கப்பட வேண்டும்.
- வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களை அகற்றும் பொழுது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்திய முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை எவ்வாறு அகற்ற வேண்டும்?
Reviewed by irumbuthirai
on
November 11, 2020
Rating:
No comments: