இந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தற்போதைய கொரோனா நிலையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பித்தலை பிற்போட தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக
அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரண்டு வாரங்களிலாவது பாடசாலைகளை மீள ஆரம்பிக்கலாமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் சுகாதாரத் துறையின் பல்வேறு கூற்றுக்கள் கருத்துக்களை அவதானிக்கும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையாகவே அது கருதப்படுகிறது.
இதேவேளை ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சாதாரணதரப் பரீட்சையை உரிய தினத்தில் நடத்தலாமா என்பது கேள்விக்குறியே...
இரண்டு வாரங்களில் பாடசாலை ஆரம்பமாகுமா?
Reviewed by irumbuthirai
on
November 03, 2020
Rating:
No comments: