வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது.
இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல,
அதே வேளை தொற்று ஒருவரிடம் இருந்து பொதுமக்களுக்கு பரவுவது தடுக்கப்பட வேண்டும். அதனை மேற்கொள்வது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும்.
மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்...
Reviewed by irumbuthirai
on
November 17, 2020
Rating:
No comments: