திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 58ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- திட்டமிட்டபடி உரிய திகதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறாது எனவும் பரீட்சை நடைபெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் உரிய திகதி அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- க.பொ.த. உயர் தர பரீட்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை. அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்கவதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஆகும் போது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
- மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை குடும்ப அங்கத்தவர்கள் பொறுப்பேற்காத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கான செலவீனங்களை அரசாங்கமே பொறுப்பேற்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மேலும் 04 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. மரணமானவர்கள் கொழும்பு-10,12, கொலன்னாவ மற்றும் ராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இத்துடன் மொத்த மரணங்கள் 122 ஆக உயர்வு.
- இன்றைய தினம் மாத்திரம் 545 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-12-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
December 02, 2020
Rating:
No comments: