திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 59ம் நாள் அதாவது புதன்கிழமை (02) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். 
  • மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றைய தினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கொரோனா தொற்றுக்குள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
  • கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) *சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண். 2) *கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 878 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.