திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 61ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கினிகத்தேனை, மஸ்கெலியா பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் இனங்காணப்பட்டதன் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள 02 பாடசாலைககளுக்கு கொரோனா தொற்று பிரதேச மாணவர்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஏனைய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தருவார்கள் எனவும் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார். 
  • அட்டுளுகமவில் சுகாதார தரப்பினருக்கு இடையூறை ஏற்படுத்தி எச்சிலை உமிழ்ந்ததாக கூறப்படும் நபரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
  • அடலுகம பிரதேச மக்கள் சுகாதார பிரிவினருக்கு ஆதரவளித்து அவர்களின் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள 5 பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது. 
  • தம்புள்ள விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட 4 ஆவது கொரோனா தொற்றாளர் இவராவார். 
  • விமான நிலையத்தை திறந்து சுற்றலா துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து சுகாதார நடைமுறைகளை தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதோடு, முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை நல்கினால் கொரோனா பரவலை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என தொற்று நோயியல் ஆய்வு பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 
  • மேலும் ஒரு கொரோனா மரணம். பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண். (IDH வைத்தியசாலையில் மரணம்) மொத்த மரணம் 130 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 521 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews

ui
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.