வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு)


மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதியே ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினமே தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேவேளை குறித்த பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் (Day Care Centres) மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜன. 11 முதலே வழங்கப்பட்டுள்ளது. 
 மேலும் மூன்றாம் தவணை விடுமுறை 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நாளை 23 பாடசாலை நடைபெறும்) 
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே தருகிறோம்.



வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு) வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்:  (ஊடக அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.