திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 54ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோர ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52, 32, 21, 26 வயதுடையவர்கள். எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் என புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
- கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு மற்றும் நடமாட்டக் கட்டுபாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உணவுப்பொதிகள் என்பன தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
- தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
- கேகாலை பொது மருத்துவமனையின் 2ம் இலக்க சிகிச்சை அறையில் சேவையாற்றிய தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
- கேகாலை - ருவன்வெல்லை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் தரம் 13ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தாய்க்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எஹெலியகொட - திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. இந்தநிலையில் எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன.
- பூசா சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 473 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
December 01, 2020
Rating:
No comments: