திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 56ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காகவும், அடுக்குமாடி குடியிருப்புக்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் நடத்தப்படும் இலவச நடமாடும் கிளினிக்குகள் அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் என்பனவும், கம்பஹா மாவட்டத்தின் இராகமை, நீர்கொழும்பு என்பனவும் நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, ஃபேர்கசன் வீதியின் தெற்கு பகுதி என்பனவும், வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு, சாலமுல்ல, விஜயபுர என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக தொடர்ந்தும் பேணப்படவுள்ளன.
- தற்போது அக்கறைப்பற்றில் நடைமுறையில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் விதிகளை எவ்வாறு தளர்த்துவது என்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவிப்பு.
- கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 178 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று உறுதி.
- தம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30) முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என தம்புள்ளை நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினரின் சேவையை அனுகியுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இவர்கள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- நாளை காலை முதல் புறக்கோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் கொழும்பு மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5 ஆம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் நான்கு கைதிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் றாகம மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. *கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண். *கொதட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். *மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 73 வயது ஆண். *சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். *அகுருஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண். *கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண். *மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 496 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
December 01, 2020
Rating:
No comments: