திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 57ம் நாள் அதாவது திங்கட்கிழமை (30) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
  • மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
  • அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • கொவிட் - 19 நிலைமையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசாங்க தகவல் திணைக்கள வளவில் உள்ள அரச வெளியீட்டு அலுவலகம் உரிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை (01) தொடக்கம் மீண்டும் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மினுவங்கொட - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,124 ஆக அதிகரித்துள்ளது. 
  • சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 
  • மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் குற்றப்புனாய்வு திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 
  • மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள விஷேட இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலயங்களும் இயங்கக்கூடிய 0112 67 78 77 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • கொவிட் 19 தொற்றாளர்களை உடனடியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் அனைத்து முன்னணி வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
  • மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 பேரில், 26 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கலஹா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், அடலுகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு.
  • இன்றைய தினம் மாத்திரம் 503 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.