கொரோனா நோய்த்தொற்று நிலைமையை முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தடையாக கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள சகல இராஜாங்க அமைச்சுகளும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மீளாய்வுசெய்யும் வகையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்..
"சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை விரைவாக உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய தயாரிக்கப்படும் குறிப்பிட்ட குறிக்கோளுடன் கூடிய தனிப் பாடத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை கல்வி முறைகளை உருவாக்குவது மற்றொரு நோக்கமாகும்.
நாட்டின் வருங்கால தலைமுறையினரை உற்பத்தித் திறன்மிக்க பிரஜைகளாக உருவாக்க அவர்கள் புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொரோனாவை தடையாகக் கொள்ள வேண்டாம் - ஜனாதிபதி
Reviewed by irumbuthirai
on
December 10, 2020
Rating:
No comments: