இன்று முதல் (ஜன. 01) ஆவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"நாம் இளமையானவர்கள்" என்ற இடம் "நாம் ஒன்றே" என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு,
'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடமிருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது. கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது. இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன்.
இந்த மாற்றத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் மாற்றப்படும் அவுஸ்திரேலிய தேசிய கீதம். காரணம் இதுதான்..
Reviewed by irumbuthirai
on
January 01, 2021
Rating:
No comments: