கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை என மின்சார சபை அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள்
உட்பட மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு காரணம் மின்சார கசிவு இல்லை..
Reviewed by irumbuthirai
on
December 22, 2020
Rating:
No comments: