Covid-19 தொற்றின் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க வேண்டும் என கோரி சிவில் அமைப்புகள் இன்று 24 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பும் நிலையம் முன்பாக போராட்டமொன்றை நடத்தினர்.
இந்த போராட்டத்தை
மலையக சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தியது. அதற்கு தலைமை வகித்து பேசிய தங்கவேல் கணேசலிங்கம் கூறுகையில்
சுதந்திர இலங்கையில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்க வேண்டும். அவர்களில் மத கோட்பாட்டிற்கு இடமளிப்பது தற்போதைய காலத்தின் தேவை எனவும், சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாமெனவும் இதனால் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோய் உள்ளதுடன் இது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது எனவும் அரசாங்கத்துக்கு நாம் எடுத்து கூறுகின்றோம்.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றில் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்ய செய்வதா? புதைப்பதா? என்று பாரிய பிரச்சினையை அரசாங்கம் முன்வந்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என சாத்வீக போரட்டத்தை மலையக சிவில் அமைப்புகள் நடத்தியது.
-மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
December 24, 2020
Rating:
No comments: