கண் பிரச்சினைக்கு சிகிச்சை பெற வரும் மாணவர் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பைக் காண முடிவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் வைத்தியர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார்.
கண் பிரச்சினைகள் காரணமாக தற்போது தினமும் 20 தொடக்கம் 30 வரையான மாணவர்கள் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று காரணமாக Online கல்வியில் அதிக கவனம் செலுத்துவதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம். எனவே பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து கணினி அல்லது மொபைல் தொலைபேசி திரையை பார்க்க வேண்டாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் இடைவெளி எடுக்க வேண்டும்.
குறிப்பாக வாந்தி, தலைசுற்றல், கண் வலி மற்றும் கண்ணீர் போன்ற அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் சிலர் CT SCAN களுக்கும் வேறு சிலர் MRI SCAN போன்ற உயர் பரிசோதனைகளுக்கும் உட்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்: டீச்மோ.
திடீரென அதிகரித்தது மாணவர்களின் கண் பிரச்சினை...
Reviewed by irumbuthirai
on
December 19, 2020
Rating:
No comments: