தற்பொழுது பல நாடுகளிலும் பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரசு இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பது பற்றி விசேட பரிசோதனைகளை ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura) ஆம்பித்துள்ளது.
இது தொடர்பாக, இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவிக்கையில்,
இந்த புதிய உருமாறிய வைரஸ் இங்கிலாந்திலே ஆரம்பமானது. தற்பொழுது இந்தியா உட்பட பல நாடுகளிடையே பரவி வருகிறது. இதை PCR பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை. இவ்வாறான பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் இதனால் இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது. இதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரசுக்கு இலக்கான நபர்கள் தொடர்பில் ஏமாறக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார்.
தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் பொழுது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
உருமாறிய கொரோனா: விஷேட பரிசோதனையை ஆரம்பித்த இலங்கை..
Reviewed by irumbuthirai
on
December 30, 2020
Rating:
No comments: