திரிபோஷா விநியோக தடை தொடர்பான விளக்கத்தை சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
அதாவது சோளத்திற்கான தட்டுப்பாடு காரணமாக
திரிபோஷா தயாரிப்பு தடைபட்டிருக்கிறது. மாறாக இதை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பபடவில்லை. தயாரிப்பு தொடர்பிலேயே சிக்கல் இருக்கிறது.
தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் குழந்தைகளின் போசாக்கு நிலை குறைவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர்
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளினதும், தாய்மார்களினதும் போசாக்கு அவசியமாகும். இதன் காரணமாக போசாக்கு உற்பத்திக்கானவற்றை விரிவுப்படுத்தி பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அதேபோன்று போசாக்கு குறைப்பாடுள்ள பிள்ளைகளுக்கும் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என நாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திரிபோஷா விநியோக தடை தொடர்பில் அரசின் விளக்கம்
Reviewed by irumbuthirai
on
December 19, 2020
Rating:

No comments: