கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா:


இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், Covid-19 தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இங்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். 
அது தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம். 
(1) பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து 'கோவாக்சின் (Covaxin)' என்ற தடுப்பூசியை உருவாக்கி அதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி அங்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை கேட்டறிந்தார். 60-க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனியாக பார்வையிட்டனர். 
(2) Biological E Limited  (பயாலஜிக்கல் இ லிமிடெட்) என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் பரிசோதனையும் நடந்து வருகிறது. 
(3) ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், 
ரஷிய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி (Sputnik-v)' கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
(4) அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உள்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது. 
(5) அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தடுப்பூசிகளை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. 
இந்த வகையில் பார்க்கும் பொழுது கொரோனா தடுப்பூசிக்கான சர்வதேச மத்திய நிலையமாக இந்தியா மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.