1952 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம் மாவட்ட வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்று சித்தியடையும் சகல மாணவர்களுக்கும் புதிய பாடசாலைகளில் தரம் 06 இல் இருந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
அந்தவகையில் இம்முறை புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் தரம் 06க்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முதல் முறையாக இணையத்தள தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாணவர்கள் தரம் 6ற்கு விண்ணப்பித்துள்ள பாடசாலைகளின் பெயர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் குறிப்பிடப்பட்ட ஏனைய தகவல்கள் உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்புக்கு அமைவாக உள்வாங்கும் பணி பாடசாலை அதிபர்களினால் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 தொடக்கம் டிசம்பர் 24 ஆம் திகதி வரை தமிழ், சிங்கள மொழி மூலம் இத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கான வாய்ப்பு அதிபர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. Mobitel நிறுவனத்தின் அனுசரணையில் ரூபா 7.5 மில்லியன் செலவில் இதற்கான வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர்க்கான பாடசாலை முதன்முறையாக Online முறையில்...
Reviewed by irumbuthirai
on
December 12, 2020
Rating:
No comments: