Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர்


ஒன்லைன் (Online) கல்வி மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மாணவர்கள் உடல் ரீதியிலான செயற்பாட்டுடன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும். இதேபோன்று மற்ற மாணவர்களுடன் பிள்ளைகள் பழக வேண்டும் இவ்வாறான நடைமுறைகள் முக்கியமானதாகும். செயல்முறையிலான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பது முக்கியமானதாகும் என சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். 
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதேபோன்று பிள்ளைகளின் போக்குவரத்து விடயத்திலும் பெற்றோர் உரிய கவனம் செலுத்த வேண்டும். அது சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் வீடுகளுக்கு வந்த பின்னர் பெற்றோர் அவர்களை முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவர்களது உடல் சுத்தத்தை பேணி வீடுகளுக்குள் அழைப்பதில் பெற்றோர் பொறுப்பாக செயற்படவேண்டும். 
இதேபோன்று பாடசாலை கென்டின் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றோர் வீடுகளிலேயே தயாரித்து வழங்குவது முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Online மூலம் எப்பொழுதும் மாணவர்களால் கற்க முடியாது - சுகாதார பணியக பிரதி பணிப்பாளர் Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.