Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு


பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப் புள்ளியின் (Z Score) அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்ய நேற்று (23) உயர் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. 
குறித்த மனுக்களானது 2019 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் 
அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, S. துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Reviewed by irumbuthirai on December 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.