Covid-19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் 98 நாடுகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் கொரொனா பரிசோதனைகளின் திறன் போன்ற பல்வேறு விடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.
2ம் இடம் வியட்நாமிற்கும்,
3ம் இடம் தாய்வானுக்கும், 4ம் இடம் தாய்லாந்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் குறித்த கணக்கெடுப்பிற்கு சீனாவை இணைத்துக் கொள்ளவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவினால் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்கப்படாமையே இதற்கான காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை...
Reviewed by irumbuthirai
on
January 28, 2021
Rating:
No comments: