மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்...


ஜனவரி 25 ஆம் திகதி தொடக்கம் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். 
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து 02 வாரங்கள் கடந்தே மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
ஏனைய பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
மேலதிக வகுப்புகளுக்கு அதிகூடிய மாணவர்களின் எண்ணிக்கை நூறாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களும் 
ஆசிரியர்களும் மாவட்டங்களிடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயங்கள் தொடர்பாக விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வகுப்புகளை நடத்திச் செல்வதற்கான ஆலோசனைகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.