பாடசாலை மாணவிகளுக்கு மாதாந்தம் வரும் மாதவிடாய் காரணமாக மாதத்தில் 02 நாட்கள் விடுமுறை எடுப்பதாக கல்வியமைச்சு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தரம் 6 க்கு மேற்பட்ட சுமார் 12 லட்சம் மாணவிகள் இவ்வாறு விடுமுறை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த மாதவிடாய்
துவாய் (நப்கீன்) இல்லாமையேயாகும். ஏனெனில் அரச பாடசாலைகளில் கற்கும் 65% ஆன மாணவிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த மாணவிகளின் உள மற்றும் உடல் சுகாதார நிலைமைகளைப் சிறப்பாக பேணிக் கொள்ளவும் அரசாங்கம் இலவசமாக மாதவிடாய் நப்கீன்களை வழங்க தீர்மானித்துள்ளது.
பிரதமரும் கல்வியமைச்சரும் இது தொடர்பான விளக்கத்தை அமைச்சரவைக்கு வழங்கி இத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது.
தரம் 6ற்கு மேற்பட்ட மாணவிகளின் மாதவிடாய்: அரசு எடுத்த நடவடிக்கை:
Reviewed by irumbuthirai
on
January 03, 2021
Rating:
No comments: