கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு:


கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக இலங்கை வைத்திய சங்கம் (SLMA) தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் குறித்த உடல்களை இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க 
முடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 
 விஞ்ஞான ரீதியான தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் குறித்த சடலங்களை அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இது மாத்திரமன்றி குறித்த அமைப்பு 07 அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளது. அவை பின்வருமாறு: 
1) சுவாச குழாய் வழியாக மட்டுமே கொரோனா தோற்று ஏற்படுகிறது. அதேபோன்று குறித்த வைரஸ் உயிரணுக்களில் மாத்திரமே பரவும். 
2) வைரஸ் உயிருள்ள கலத்தில் மட்டுமே வளர முடியும். உயிரற்ற உடலில் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உயிர் வாழாது. 
3) பிரேத பரிசோதனையின் போது PCR முடிவுகள் positive என்றாலும் அந்த சடலங்களில் இருந்து வைரஸ் பரவும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாது. 
4) அடக்கம் செய்யப்படும் உடல்களினால் ஏற்படும் நீர் மாசை விட தொற்றாளர் ஒருவரினால் வெளியேற்றப்படும் கழிவுகளினால் நீர் கடுமையாக மாசுபடக்கூடும். 
5) நிலத்தடி நீரில் வைரஸ் துகள்கள் பதிவானாலும் அதனால் நோய்த்தொற்று ஏற்படுவது பற்றி எந்த தகவலும் இல்லை. இன்புளுவன்சா மற்றும் சார்ஸ் நிலைமைகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளில் கூட இவ்வாறான நோய்த்தொற்று குறித்து எந்த பதிவும் இல்லை. 
6) டென்மார்க்கில் அடக்கம் செய்யப்பட்ட கீரிகள் மீண்டும் தோண்டப்பட்டமைக்கான காரணம் நீர் மாசடைவது அல்ல. மாறாக அந்த கீரிகளின் உடல்களிலிருந்து நைட்ரஜன் கழிவுகள் சூழலுடனும் நீருடனும் கலப்பதே ஆகும். 
7) நீரினால் பரவும் கொலரா போன்ற கொடிய நோய்கள் மூலம் இறப்பவர்களின் சடலங்கள் கூட அடக்கம் செய்யப்படுகின்றன. 
என்று இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே மேற்படி அவதானிப்புகளை விஞ்ஞான ரீதியான நிலமைகளையும் கருத்தில் கொண்டு, கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை இலங்கையில்  அடக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இலங்கை மருத்துவ சங்கம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு: கொரோனா உடல்களை அடக்கம் செய்தல்: இலங்கை வைத்திய சங்கத்தின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.