தினந்தோறும் உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும தெரிவிக்கையில்,
கரந்தியான குப்பை மேட்டிற்கு எடுத்துவரப்படும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 700 டொன் கழிவுப்பொருட்களை பயன்டுத்தி 10 மெகாவாட் (10 MW) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதை தேசிய மின்சார வலைப்பின்னலுடன் இணைக்க முடியும்.
ஆனால் இத்திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் மாத்திரம் போதாது. மொரட்டுவ, தெகிவளை-கல்கிஸ்சை, கோட்டை, ஹோமாகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் குப்பைகளையும் பயன்படுதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது...
Reviewed by irumbuthirai
on
January 21, 2021
Rating:
No comments: