இலங்கை வந்துள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் மூடப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாளை (4) அவர்கள் பொலநறுவை பராக்கிரம அரண்மனை வளாகம், லங்காதிலக விகாரை, தலதா முற்றம், சிவன் ஆலயம், கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். எனவே நாளை குறித்த இடங்கள் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது.
நாளை மறுதினம்
சீகிரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதால் அன்றைய தினம் குறித்த வலயம் நண்பகல் 12 மணி வரை உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படமாட்டாது என குறித்த நிதியம் அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் கொத்தணி ஒன்று உருவானால் அதற்கு யார் பொறுப்பு என ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.
மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்...
Reviewed by irumbuthirai
on
January 03, 2021
Rating:
No comments: