ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராவார்.
தற்போதுவரை இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த
சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஷாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 1ம் இடத்திற்கு முன்னேறியதுடன்
முகேஷ் அம்பானி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாமிடத்தில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா இருக்கின்றார்.
77.8 பில்லியன் டொலர் மொத்த சொத்துக்களை கொண்ட ஷான்ஷான் உலக பணக்காரர் பட்டியலில் 11 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இவர் மற்ற பணக்காரர்களை போலல்லாமல் இதழியல் துறை, காளான் வளர்ப்பு மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றிலேயே கவனம் செலுத்தி வந்தவர்.
கடந்த ஏப்ரலில் தனக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை சீன பங்குச் சந்தையில் இவர் பட்டியலிட்டார்.
மேலும் மூன்று மாதங்களுக்கு பிறகு இவரது தண்ணீர் போத்தல் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிட்டார். இந்நிறுவனத்தின் பங்கு 155% ற்கு மேல் அதிகரித்தது.
கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இறங்கிய இவரது மற்றொரு நிறுவனத்தின் பங்கு விலை 2,000% க்கு மேல் அதிகரித்தது.
அந்த வகையில் இவரது வளர்ச்சி வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிக செல்வம் ஈட்டப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி..
Reviewed by irumbuthirai
on
January 04, 2021
Rating:
No comments: