பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை:


ஹுவாவி (Huawei) நிறுவனத்துடன் இணைந்து நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை உருவாக்கி வெளிவாரி கல்வி வசதிகளை முன்னேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதற்காக 30,000 உபகரணங்களை இலவசமாக பெற்றுக் 
கொடுப்பதற்கு மேற்படி நிறுவனம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது. 
இந்த செயற்றிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சரின் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, தகவல் தொழில்நுட்ப கல்விப் பிரிவின் பணிப்பாளர் உதாரா திக்கும்புர, ஹுவாவி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உப தலைவர் இந்திக டி சொய்சா, ஹுவாவி பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரிகார்டோ ஷியாவோ உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 
கற்றல் நடவடிக்கைகளை மிகவும் பிரயோசனமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த இணையதள வசதிகளை பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது காலத்துக்கு பொருத்தமானதும் மிகவும் பெறுமதியானதுமாகும் என கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: பாடசாலைகளுக்கு இணைய வசதிகளுடன் Online கல்வி: கல்வியமைச்சு நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.