கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்
காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஏனைய நேரத்தில்
25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் Park and Ride பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
இதில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்க முடியும் என்பதுடன், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்து பஸ் சேவையை வழங்குதல்,
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தல்,
சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்தல்,
பயணத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்தல்,
பயணிகளின் மன உளைச்சலைக் குறைத்தல் போன்ற விடயங்கள் இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்...
Reviewed by irumbuthirai
on
January 15, 2021
Rating:
No comments: