நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின்
எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள்.
இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டடுள்ளது. இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்:
Reviewed by irumbuthirai
on
February 17, 2021
Rating:
No comments: