கொரோனாவினால் பாதிக்கப்படும் க.பொ.த. (சா.தர) பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த மாணவர்களுக்கு சிகிச்சைபெறும் மத்திய நிலையங்களில் இருந்து பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த மத்திய நிலையம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின்
அனுமதிக்கு உட்பட்ட வகையில் அடையாளம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள்
Reviewed by irumbuthirai
on
February 12, 2021
Rating:

No comments: