இஸ்ரேலில் கடந்த 02 வருடங்களில் 4வது பொதுத் தேர்தலையும் நேற்று முன்தினம் அந்த மக்கள் சந்தித்துள்ளனர்.
தற்போது பதவியில் உள்ள பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு
இந்தத் தேர்தல் சவால் மிக்கதாக அமையும் என சொல்லப்படுகிறது.
முன்னைய 03 தேர்தல்களிலும் எந்தத் தரப்பும் உறுதியான வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர அமைக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கமும் கடந்த டிசம்பர் மாதம் முறிந்தது.
நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் விசாரணை தொடங்க 02 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றது.
இதேவேளை தம் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் பென்ஜமின் நெதன்யாகு, அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமரை பதவி விலகக் கோரி இஸ்ரேலில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு: இதுவரை வெளியான முடிவுகளின்படி யாரும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இரு வருடங்களில் 04 பொதுத் தேர்தலை சந்தித்த இஸ்ரேல்!
Reviewed by irumbuthirai
on
March 25, 2021
Rating:
No comments: